வெளி மாநில தொழிலாளர்கள் 14 லட்சம் பேர் ரெயில்களில் ஊர் திரும்பினர்
வெளி மாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 14 லட்சம் பேர் ரெயில்களில் ஊர் திரும்பி உள்ளனர்.
புதுடெல்லி,
ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த வகையில் நேற்று முன்தினம் வரை 1,074 ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்து இருப்பதாகவும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களில் தினமும் 2 லட்சம் பேர் பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.