மத்திய பிரதேசத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மத்திய பிரதேசத்தில் இன்று மேலும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-16 17:15 GMT
போபால், 

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85,940 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,752 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இன்று மேலும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,790 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றி இருந்து 2,315 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றுக்கு இன்று 4 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 243 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்