இன்றைய அறிவிப்புகளில் உற்பத்தி, வேலை வாய்ப்பை அதிகரிக்க முக்கியத்தும்- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்குகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Update: 2020-05-16 10:45 GMT
புதுடெல்லி,

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் மீட்டெடுக்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பலான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான துறைக்கான சலுகை திட்டங்களை புதன்கிழமையும், வெளிமாநில தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கான சலுகை திட்டங்களை நேற்று முன்தினமும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 3-வது கட்டமாக நேற்று விவசாயம், பால், மீன்வளத்துறை தொடர்பான சலுகை திட்டங்களை அவர் அறிவித்தார். 

4-வது நாளாக இன்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- சுயசார்பு  பாரதத்தை உருவாக்க பல போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். சுயசார்பு பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஜி.எஸ்.டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் கொண்டு வந்திருக்கிறார்.  

நாட்டில் தொழில் துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை. கடந்த சில ஆண்டுகளாக வலிமையான சீர்திருத்தங்களை பிரதமர் கொண்டு வருகிறார்.  ஜி.எஸ்.டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்குகிறது” என்றார்.

மேலும் செய்திகள்