இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது -டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி

இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது என டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

Update: 2020-05-16 10:19 GMT
புதுடெல்லி: 

கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில் தனது நாடு இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  டுவீட் செய்து இருந்தார். இந்த தொற்றுநோய்களின் போது நாங்கள் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை நிற்கிறோம்" என்றும் அவர் கூறி உள்ளார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:- 

டொனல்டு டிரம்ப்புக்கு நன்றி, இந்த தொற்றுநோய்க்கு எதிராக நம் அனைவரும் கூட்டாக போராடி வருகிறோம் இதுபோன்ற காலங்களில், நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதும், நமது உலகத்தை ஆரோக்கியமாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடவும் முடிந்தவரை செய்ய வேண்டியது எப்போதும் முக்கியம். இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்