தமிழகத்தை சேர்ந்த 700 தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு ரெயில் புறப்பட்டது
தமிழகத்தை சேர்ந்த 700 தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு ரெயில் தமிழகம் புறப்பட்டது.
புதுடெல்லி
தமிழ்நாட்டை சேர்ந்த 700 தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 700 தப்லீகி ஜமாத் உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு ரெயில் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை டெல்லியை விட்டு வெளியேற அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.