வீரருக்கு கொரோனா தொற்று; இந்திய ராணுவ தலைமையகத்துக்கு ‘சீல்’

இந்திய ராணுவ தலைமையகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2020-05-15 23:00 GMT
புதுடெல்லி,

இந்திய ராணுவத்தின் தலைமையகமான சேனா பவன் டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பணியில் இருந்த ஒரு வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த வீரர் பணியாற்றி வந்த தலைமையகத்தின் ஒரு பகுதி கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. 

இதை தொடர்ந்து அந்த பகுதி மட்டும் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீரருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே துணை ராணுவப்படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) தலைமையகம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) தலைமையகமும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததால் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்