வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும்- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Update: 2020-05-15 10:57 GMT
புதுடெல்லி,

 கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பான விரிவான திட்டங்களை நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக செய்தியாளர்களை சந்தித்து  அறிவித்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று 3-வது நாளாக  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்  கூறியதாவது:-  விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க கடந்த 2 மாதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

ஊரடங்கின் போது உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.  ஊரடங்கின் போது விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிஷான் திட்டத்தில் ரூ. 18,700 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 

 பீம் யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 64 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.  விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  குளிர்பதன கிடங்கள் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளுக்கு நிதி செலவிடப்படும்.ரூ.10 ஆயிரம் கோடி சிறு குறு உணவு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளது. ” என்றார். 

மேலும் செய்திகள்