சிறப்பு ரெயில்கள் முன்பதிவால் ரூ.45 கோடி வசூல்

சிறப்பு ரெயில்கள் முன்பதிவால் ரூ.45 கோடி வசூல் ஆகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-14 22:30 GMT
புதுடெல்லி,

ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதற்கான முன்பதிவும் நடைபெறுகிறது.

இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சிறப்பு ரெயில்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரெயில்வேக்கு ரூ.45.30 கோடி வசூல் ஆகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்