ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது- நிர்மலா சீதாராமன்

ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-13 11:41 GMT
புதுடெல்லி,

ஜுன், ஜூலை , ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கான பி.எஃப் தொகையை அரசே செலுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.  டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “

* 71,700 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
* மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இந்த கொரோனா என்கிற பேரிடர் வந்திருக்கிறது.

* 41 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
*வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50,000 கோடி வழங்கப்படும்
*ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.
*நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு உயர்வு
*நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு

*பி.எப் தொகைக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் 72.25 லட்சம் ஊழியர்கள் பயனடைவர். 
* அடுத்த காலாண்டில் பிஎப் சந்தாவை  தொழிலாளர்கள், நிறுவனங்கள் 10 சதவிகிதம் செலுத்தினால் போதும். 
* ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கும் பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும்.
*பிஎஃப் சந்தா தொகையை அரசு செலுத்துவதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். 

*குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது. 
*நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்படுகிறது. 

 *மின்வாரியங்ளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்
* தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.
*வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி

மேலும் செய்திகள்