மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 921 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 921 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2020-05-13 05:39 GMT
புனே,

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.  பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்து 427 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  பலி எண்ணிக்கை 868ல் இருந்து 921 ஆக உயர்ந்து உள்ளது.  5 ஆயிரத்து 125 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.

கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது.  கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் கோவா நீடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து மணிப்பூர் (2 பேர்), அருணாசல பிரதேசம் (ஒருவர்), அந்தமான் நிகோபார் தீவுகள் (33 பேர்) மற்றும் மிசோரம் (ஒருவர்) ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முழு அளவில் விடுபட்டு உள்ளன.

மேலும் செய்திகள்