சாலையில் நடந்து செல்லும் தொழிலாளர்கள் வங்கிக்கணக்கில் ரூ.7,500 செலுத்த வேண்டும் - பிரதமருக்கு ராகுல்காந்தி கோரிக்கை
சாலையில் நடந்து செல்லும் தொழிலாளர்கள் வங்கிக்கணக்கில் ரூ.7,500 செலுத்த வேண்டும் என்று பிரதமருக்கு ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றுவதற்கு முன்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் பாதிக்கப்படும்போது, தாய் அழுவாள். அதுபோல், இன்று தன்னுடைய லட்சக்கணக்கான பிள்ளைகள் சாலையில் பசியுடனும், தாகத்துடனும் நடந்து செல்வதை பார்த்து இந்தியத்தாய் அழுது கொண்டிருக்கிறாள்.
அந்த தொழிலாளர்கள் பத்திரமாக வீடு போய்ச் சேருவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். வாழ்வாதாரத்துக்காக, அவர்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.7 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.