கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாராக வேண்டும்- பிரதமர் மோடி
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
புதுடெல்லி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.
இதற்கிடையே, ஊரடங்கையொட்டி விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரவல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் 5-வது தடவையாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
*உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு சுமார் 2.89 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது
*இந்த ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருக்கிறது
*ஒரே வைரஸ் நம்மை வெகுவாக பாதித்துள்ளது.
*இதுபோன்ற உலகளவிய பொது முடக்கம் இதற்கு முன்பு உலகம் காணாதது
*கொரோனாவுக்கு எதிராக 4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது.
*கொரோனா வைரஸில் இருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே முயற்சித்து வருகிறது.
* கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்துள்ளனர்.
*4 மாதங்களில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாரக வேண்டும்
*வைரசுக்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும்.
*தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாசாரம்
* உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
* இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்
இவ்வாறு அவர் பேசினார்.