ஊரடங்கில் மக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க கிராமங்களில் உலாவரும் பேய்கள்!!!

ஊரடங்கில் மக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க ஒடிசா மாநில கிராமங்களில் போலீசார் பெண்களை பேய்களாக வேடமணிய வைத்து பயமுறுத்தி வருகிறார்கள்.

Update: 2020-05-11 05:32 GMT
புவனேஸ்வர்

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆகவும், உயிரிழப்பு இரண்டாயிரத்து 109 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்புகளின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆபத்தான வைரஸ்கள் பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய காவல்துறையும் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க அவர்கள் புதுமையான முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
 
கொரோனா ஹெல்மெட் அணிந்த போலீசார், கொரோனா போல் வேடமணிந்த போலீசார் என பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இப்போது, ​​கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரம் குறித்து விழிப்புணர்வை பரப்பும் முயற்சியில், ஒடிசா கிராமத்தில் உள்ளவர்கள் தெருக்களில் நடமாடுவதை தடுக்க 'பேய்' என்று பயங்காட்டி வருகின்றனர் 
 
கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண்அலி சுண்ணாம்பு-வெள்ளை தோலுடன் பேயாக உடை அணிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுபவர்களை பின்தொடர செய்து பயமுறுத்துகிறார்கள்  

இந்த 'புடவை அணிந்த பெண்' மக்கள் வீட்டில் தங்குவதை உறுதி செய்வதற்காக இரவு முழுவதும் சுற்றித் திரிகிறார்கள், இதனால் யாரும் வெளியேறுவதில்லை, இதனால் நோய் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும்
 
ஒடிசாவில் தற்போது வரை பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 294 ஆகும், அவற்றில் 63 குணமாகி 2 மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் செய்திகள்