கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அதிகாரிகளுடன் நகரி எம்.எல்.ஏ. ரோஜா ஆலோசனை

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நகரி எம்.எல்.ஏ. ரோஜா ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-05-10 05:32 GMT
சென்னை,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ரோஜா கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்