மும்பை தாராவியில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலம் மும்பை தாராவி 68 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் ஆட்கொல்லி கொரோனா காட்டு தீ போல பரவி வருகிறது. இன்று மேலும் 68 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம், மும்பை தாராவி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தாராவி பகுதியில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். தாராவி பகுதியில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உள்ளது.