வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்-மத்திய அரசு
ஆகஸ்ட் 1 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால், எப்போது கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.