கர்நாடகாவில் மதுக்கடைகளை திறக்க அனுமதி- கலால்துறை அமைச்சர் அறிவிப்பு

கர்நாடகாவில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-05-02 13:37 GMT
பெங்களூரு, 

நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும்,  கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில், மத்திய அரசு  சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் மே 4 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அம்மாநில கலால் துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “  மே 4 ஆம் தேதி முதல் கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் விற்பனைக்கு திறக்கப்படும்.  சிவப்பு மண்டல பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது . மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்களுக்கு அனுமதியில்லை. 3 அடி சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து மதுவாங்கி செல்லலாம்” என்று தெரிவித்தார்.  

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி கர்நாடகாவில் 598 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்