இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 1,147 ஆக உயர்வடைந்து இருந்தது. 8,889 பேர் குணமடைந்தும், 25,007 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்தது.
இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக உயர்வடைந்து உள்ளது. 9,951 பேர் குணமடைந்தும், 26,167 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43ல் இருந்து 37 ஆயிரத்து 336 ஆக உயர்வடைந்து உள்ளது.