மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்களில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனாவுக்கு மராட்டியத்தில் மட்டும் 1985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மராட்டியத்தில் மாநில தலைநகரான மும்பையில்தான் கடும் பாதிப்பு காணப்படுகிறது. மும்பையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,549 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 100 - ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.