உத்தரபிரதேச கிராமங்களில் வெளியூர்களில் இருந்து வீடு திரும்பும் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்கப்படுவதில்லை

உத்தரபிரதேச கிராமங்களில், நகரங்களில் இருந்து வீடு திரும்பும் சில குடும்ப உறுப்பினர்கள் கூட கிராமத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை

Update: 2020-04-13 12:21 GMT

புதுடெல்லி


டெல்லி,மும்பை, கொல்கத்த சென்னை போன்ற நகரங்களில் வேலைபார்த்து வந்த  உத்தரபிரதேச மாநிலத்தை தொழிலாளர்கள் பலவேறு இன்னல்களுக்கு இடையில் தங்கள்சொந்த மாநிலத்திற்கு திரும்பினர் ஆனால் அங்குள்ள அவர்கள் கிராமங்களில் அவர்களை அனுமதிக்கவில்லை.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக திரும்பி வரும் தொழிலாளர்கள் ஊருக்குள் நுழையவோ அல்லது மக்களை சந்திக்கவோ கூடாது என்று மாநில அதிகாரிகள் கிராம சபைகளுக்குதெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக, அவர்கள் கிராமத்திற்கு வெளியே உள்ள பள்ளிகளிலோ அல்லது பண்ணைகளிலோ தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அங்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் வழக்கமான வருகைகள் மற்றும் ஊரடங்கு  உத்தரவுகள் பின்பற்றப்படுவதை போலீசார் உறுதி செய்கின்றனர்.

டெல்லிக்கு தென்கிழக்கே 450 கிலோமீட்டர் (280 மைல்) தொலைவில் உள்ள தைபூர் கிராமத்தின் தலைவர் மல்கன் சிங் கூறுகையில், "இங்கு மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள். ஏராளமான தவறான தகவல்களும் பரவுகிறது. 

"எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் உறவினர்களை எங்களுடன் தங்க அனுமதிக்கவில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்