கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து உள்ளன -அமைச்சர் தாமஸ் ஐசக்
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து உள்ளன என அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி உள்ளார்.
திருவனந்தபுரம்
கேரளாவில் 376 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன. கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிர் இழந்து உள்ளனர். 36 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
ஒரு வாரத்திற்கு முன்பு, கேரளாவில் 357 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இறந்தவர்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது. கடந்த மாதம், மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் இருந்தது. ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை புகாரளித்த மாநிலம் கேரளா ஆகும்.
"கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. கடந்த ஒரு வாரமாக செயலில் உள்ள பாதிப்புகளும் குறைந்துவிட்டன.மீட்கப்பட்ட பாதிப்புகள் (பச்சை வளைவு) விரைவில் மஞ்சள் வளைவைக் கடக்கும் என்று கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் டுவீட் செய்துள்ளார்.
COVID-19 curve of Kerala has started to flatten. The active cases for the last one week has declined. The recovered cases (green curve) will cross the yellow curve soon.#COVID2019#COVIDpic.twitter.com/G9nja0UYCU
— Thomas Isaac (@drthomasisaac) April 12, 2020