மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,895 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,895 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-12 10:52 GMT
மும்பை,

நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. மராட்டியத்தில்  இன்று  ஒரே நாளில் 134 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,895 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும்   அதிகபட்சமாக மும்பையில் 113 பேருக்கும், மீரா பாகியேந்தில் 7 பேருக்கும், தானே மற்றும் நவிமும்பையில் தலா 2 பேருக்கும் வாசாய் விரார் மற்றும் பிவாண்டியல் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மராட்டியத்தில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்