தமிழகத்தில் 5 மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்களில் சுவாச-கொரோனா தொற்று-இந்திய மருத்துவ கவுன்சில்

தமிழகத்தில் 5 மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறு தொற்றும் கொரோனா வைரஸ் தொற்றும் இருப்பது கண்டறியப்பட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து உள்ளது.

Update: 2020-04-10 13:05 GMT
புதுடெல்லி 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் இந்த ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

நாட்டின் 15 மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறுடன் கூடிய கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நோயாளிகளை ஆய்வு செய்த போது அவர்களில் 40 சதவீதம் பேர் எந்த விதமான வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 15 மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களுக்கும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.. கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 911 நோயாளிகளுக்கு கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (எஸ்ஏஆர்ஐ) சோதனை நடத்தப்பட்டதில் அதில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதில் 40 சதவீதம் பேர் எந்த விதமான வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. கொரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலத்துல்  8 மாவட்டங்களிலும், மேற்கு வங்காளத்தில் 6 மாவட்டங்களிலும், தமிழகம் மற்றும் டெல்லியில் தலா 5 மாவட்டங்களிலும் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருக்கும் நோயாளிகள் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.

இதன் மூலம் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று நோயாளிகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது மார்ச் 14-ம் தேதிக்கு முன்பாக இவர்கள் பாதிப்பின் சதவீதம் பூஜ்ஜியமாக இருந்த நிலையில், ஏப்ரல் 2-ம் தேதிக்குள்ளாக 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதன் மூலம் குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கண்காணிக்க வேண்டும் என  தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்