பிரதமர் மோடியின் முயற்சிக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் பிரதமரின் முயற்சிக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-03-13 13:19 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக இணைந்து நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு சார்க் நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்குவதாகவும், கொரோனா பற்றி ஆலோசிக்க தயாராக உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முயற்சியை வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

சார்க் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்