உத்தரபிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா உறுதி - முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
லக்னோ
உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழு பேர் ஆக்ராவைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலா ஒருவர் நொய்டா மற்றும் லக்னோவைச் சேர்ந்தவர்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உத்தரபிரதேசத்தில் வரும் மார்ச் 22 வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. மார்ச் 22ல் நிலைமை ஆய்வு செய்யப்பட்டு விடுமுறை நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.
தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள் தொடரும், ஆனால் இதுவரை தொடங்காத தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என கூறினார்.