இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் தாக்கியது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 119 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் 56 பேர் மற்றும் வெளிநாட்டினர் 17 பேர் இதில் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாகக் கேரளாவில் 17 பேர், மராட்டியம் 11 பேர், உத்தரப்பிரதேசத்தில் 10 பேர், டெல்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.