சிறை காவலில் உள்ள உமர் அப்துல்லாவுக்கு 50-வது பிறந்த நாள்: குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்தினர்
சிறை காவலில் உள்ள உமர் அப்துல்லாவை அவரது குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்தினர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின்படி ஹரிநிவாஸ் என்ற கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட கடந்த ஆகஸ்டு 5-ந் தேதியில் இருந்து 7 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார். அவருக்கு நேற்று 50-வது பிறந்தநாள். இந்த பிறந்த நாள் அவருக்கு அமைதியான நாளாகவே அமைந்துவிட்டது.
அவரது தாய், சகோதரிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் நேற்று மதியம் சிறையில் உமர் அப்துல்லாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனாலும் அவரது தந்தையும், 5 முறை முதல்-மந்திரியாக இருந்தவருமான பரூக் அப்துல்லாவும் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், அவரால் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. உமர் அப்துல்லாவின் டுவிட்டர் பக்கத்தில் சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி, அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் சத்ருகன்சின்ஹா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்பட சிலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.