அமீரகத்தில் இந்தியருக்கு கொரோனா பாதிப்பு

அமீரகத்தில் இந்தியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-07 20:09 GMT
அபுதாபி,

அமீரகத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 5 பேர் குணமடைந்து விட்டனர். ஒரு சிலர் குணமடைந்தாலும், பலருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று அமீரகத்தில் ஒரே நாளில் இந்த வைரஸ் தொற்று காரணமாக 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரில் ஒருவர் இந்தியர். மற்றவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்