ஓமனில் இருந்து வந்த தமிழர் ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை

ஓமனில் இருந்து வந்த தமிழர் ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-03-07 13:28 GMT
கோப்புக்காட்சி
புதுடெல்லி,

ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.  

கொரோனா உறுதி செய்யப்பட்ட மூவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாகவும் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும்  34 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் கூறியுள்ளார்.

ஓமனில் இருந்து வந்த தமிழர் ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து  இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை தடுத்து நிறுத்த உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்