கர்நாடகாவில் 2 கார்கள் மோதி கோர விபத்து: தமிழக பக்தர்கள் 10 பேர் பலி
கர்நாடகாவில் 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் உள்பட 13 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
பெங்களூரு,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த ஒரே குடும் பத்தினர் கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவிலுக்கு காரில் சென்றனர். கோவி லில் சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் அதே காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
துமகூரு மாவட்டம் குனிகல் அருகே பேலதகெரே அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் பயணித்த கார் பெங்களூருவை நோக்கி வந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து ஒரு கார் சென்றது. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சென்ற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. மேலும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருந்த தடுப்புவேலியை அந்த கார் இடித்து தள்ளிவிட்டு எதிர் ரோட்டிற்கு சென்றது.
இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் வந்த கார் மீது தறிகெட்டு ஓடிய கார் மோதியது. இதில் 2 கார்களுமே அப்பளம் போல நொறுங்கின. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 2 கார்களிலும் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 7 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக இறந்து விட்டார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சிக்கனபள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 35), இவரது மனைவி தனுஜா (25). இந்த தம்பதியின் குழந்தைகள் மாலாஸ்ரீ(4), 9 மாத குழந்தை சேத்தன், மஞ்சுநாத்தின் உறவினர்களான சவுந்தர்ராஜ் (48), கவுரம்மா (60), ரத்னம்மா (52), சரளா(32), ஸ்ரீசன்னியா (14) மற்றும் கார் டிரைவர் ராஜேந்திரன் (27) என்று அடையாளம் தெரிந்தது. மேலும் படுகாயம் அடைந்தவர்களின் பெயர்கள் ஸ்வேதா (32), கங்கோத்திரி (14), மற்றும் ஹர்சிதா (14) என்பதாகும். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய காரில் பயணம் செய்த 4 பேரில் 3 பேர் பலியாகி இருந்தார்கள். அவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள். ரியல்எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய காரை டிரைவர் அதிவேகமாக ஓட்டி வந்ததும், அதிகாலை 2.30 மணியளவில் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்றும், இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடி கோர விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
அதே நேரத்தில் தடுப்பு வேலியை இடித்து தள்ளியதுடன் எதிர்ரோட்டிற்கு வந்ததால், மற்றொரு கார் மீது மோதி அதில் இருந்த 10 பேர் பலியாக நேரிட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மஞ்சுநாத் தனது குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்த தர்மஸ்தலா மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றதும், முடி காணிக்கை செய்து, சாமி தரிசனம் முடித்து ஓசூருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.