சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழிசை சவுந்திரராஜன் அசத்தல்

தெலுங்கானா சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார்.

Update: 2020-03-06 15:54 GMT
ஐதராபாத், 

டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற பிறகு அந்த மாநில சட்ட மன்றத்தின் முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது.

சட்டமன்றத்தில் உரை நிகழ்த்த சென்ற கவர்னர் தமிழிசையை முதல் மந்திரி சந்திரசேகரராவ், சபாநாயகர் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

தெலுங்கானா சட்டமன்றத்தில்  முதல் தமிழ்க்குரலாக டாக்டர் தமிழிசையின் குரல் ஒலித்தது. அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் சொல்லிவிட்டு அதன் பிறகு தெலுங்கிலும் அந்தரிக்கு நமஸ்காரம் என்று கூறிவிட்டு தனது உரையை தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் ஆங்கிலத்தில் உரை யாற்றினார்.

தனது பேச்சை முடிக்கும் போது ‘உறு பசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு’ என்ற திருக்குறளை தமிழில் கூறி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார்.

அதிகமான பசி, ஓயாத நோய், அழிவை உருவாக்கும் பகை ஆகியவை இல்லாமல் இருப்பதே மிகச்சிறந்த நாட்டுக்கு அழகு என்றார்.

மேலும் செய்திகள்