இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை கண்டறிய முடியவில்லை - வெளியுறவுத் துறை தகவல்
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை கண்டறிய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஈரானில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 495 பேரை கண்டறிய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன் அவர்கள் இந்தியா வந்ததாகவும், இது தொடர்பாக ஈரான் தூதகரத்திடம் எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளர். இந்தியா - ஜரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் பயணத்தை தவிர்க்குமாறு சுகாதார துறை அறிவுறுத்தியதாகவும் இதனால் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றும் ரவீஷ் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 107 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 3750 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.