மக்களவையில் அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்!

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யபட்டனர்.

Update: 2020-03-05 10:27 GMT
கோப்பு படம்
புதுடெல்லி

மக்களவையில்   அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக் தாகூரும், பிரதாபன், கவுரவ் கோகோய், டீன் குரியாகோஸ், ஆர். உன்னிதன், பென்னி பெஹ்னான், குர்ஜித் சிங் ஆஹ்லா  ஆகியோரை சபாநாயகர்  ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். 7 எம்.பிக்களில் தமிழகத்தை சேர்ந்த மாணிக் தாகூரும் ஒருவர் ஆவார்.

சபாநாயகர் பொறுப்பில் இருந்த ரமாதேவி கையில் இருந்த காகிதங்களை கிழித்து எறிந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 7 எம். பிக்களும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கபட்டு உள்ளது.

இது குறித்து  மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதர் ரஞ்சன் சவுத்ரி கூறும் போது 

இது சர்வாதிகாரம்,  பிரச்சினை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்று தெரிகிறது, அதனால் தான் இந்த இடைநீக்கம். இதை நாங்கள் வன்மையாக  கண்டிக்கிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள்