எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், 3 வார இடைவெளிக்கு பிறகு, கடந்த 2-ந் தேதி மீண்டும் தொடங்கியது. டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் முதல் 2 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது.
3-வது நாளான நேற்றும், நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார். எனினும் அவர்கள் டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து கோஷமிட்டவாறு இருந்தனர்.
இந்த கடும் அமளிக்கு இடையே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேரடி வரி விதிக்கும் ‘விவாட் சே விஸ்வாஸ்’ மசோதாவை கொண்டுவந்தார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேபோல் மாநிலங்களவையில் அலுவல்களை ஒத்திவைத்து, டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.
டெல்லி வன்முறையை தீவிர பிரச்சினையாக கருதி பரிசீலனை செய்வதாகவும், ஹோலி விடுமுறைக்கு பிறகு அவையில் விவாதிக்கப்படும் என்றும் அவைத்தலைவர் கூறினார். அவைத்தலைவரின் முடிவை ஏற்காத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடியாக விவாதிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
முன்னதாக டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும், வன்முறையால் உயிரிழப்பு ஏற்பட்டதால் அதற்கு பொறுப்பு ஏற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. மற்றும் கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.