வெளிநாடுகளில் 17 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் தகவல்
வெளிநாடுகளில் 17 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளதரன் கூறியதாவது:-
வெளிநாடுகளில் 17 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் 16 இந்தியர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவருக்கும் இந்த நோய் தாக்கி உள்ளது.
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அதுபோல், சீனாவில் இருந்து 2 ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அதற்கு ஏர் இந்தியா ரூ.5 கோடியே 98 லட்சம் கோரி உள்ளது.
சீனாவின் உகான் நகருக்கு மருந்து பொருட்களை கொண்டு சென்ற விமானப்படை விமானம், திரும்பி வரும்போது இந்தியர்களை அழைத்து வந்தது. அதற்கான செலவுத்தொகையை ராணுவ அமைச்சகம் இன்னும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.