ஐதராபாத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி?

47 மாதிரிகளில் இரண்டு மாதிரிகளில் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளதால் தெலுங்கானா சுகாதாரத் துறை அதிகாரிகள் பதட்டத்தில் உள்ளனர்.

Update: 2020-03-04 10:07 GMT
கோப்பு படம்
ஐதராபாத்

ஐதராபாத்தில் கொரோனா பாதித்த என்ஜீனியருடன் தொடர்பிலிருந்த 36 பேருக்கும் கொரோனா வைரசுக்கான சில அறிகுறிகள் இருப்பதால் தனிமை வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 24 வயதாகும் என்ஜீனியர் ஒருவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக துபாய்க்கு கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்ற அவர், பின்னர் 20 ஆம் தேதி பெங்களூரு திரும்பி வந்தார்.

2 நாட்கள் அங்கு பணியாற்றிய அவர், பேருந்து மூலம் ஐதராபாத்துக்கு வந்தார். அங்கு கடந்த திங்கள்கிழமை உடல்நிலை பாதிக்கப்படவே, பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மூலம் வேறு யாருக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது.

இதனை தொடர்ந்து துபாயில் இருந்து திரும்பிய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்ஜினியருடன் தொடர்பில் இருந்த 88 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் ஹைதராபாத் என்ஜீனியருடன் பேருந்தில் பயணித்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 47 பேருக்கு கொரோனா வைரசுக்கான சில அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மொத்தம் 47 மாதிரிகளில் இரண்டு மாதிரிகளில்  வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளதால் தெலுங்கானா சுகாதாரத் துறை அதிகாரிகள் பதட்டத்தில் உள்ளனர் . கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து  உறுதிப்படுத்த மேலதிக சோதனைகளுக்காக புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) க்கு அனுப்பப்படுகிறது.

ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் நேற்று நடந்த  பரிசோதனை 47 மாதிரிகளில் 45  வைரஸ் பாதிப்பு இல்லை என்பது  கண்டறியப்பட்டது.  மீதமுள்ள இரண்டு மாதிரிகளின் முடிவுகள் வியாழக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது  என தெலுங்கானாவின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் ஜி. சீனிவாஸ் ராவ் கூறினார். இரண்டு மாதிரிகளில் வைரஸ்   அதிகாரி டாக்டர் ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 47 பேரும் தனிமை வார்டில் வைத்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் அறிகுறி இல்லாதோர் தொடர்ந்து அவர்களது வீடுகளிலேயே வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 14 நாட்கள் வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்