நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தடுப்பு மீது பா.ஜனதா எம்.பி.யின் கார் மோதியதால் பரபரப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தடுப்பு மீது பா.ஜனதா எம்.பி.யின் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த காரின் டயர் பஞ்சர் ஆக்கப்பட்டது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. கவுசாம்பி வினோத் குமார் சோங்கருக்கு சொந்தமான சொகுசு கார், நேற்று நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தது. அப்போது, தவறுதலாக பாதுகாப்பு தடுப்பு மீது மோதியது.
அவற்றின் மீது மோதினால், என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே நிலையான பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. தரையில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஆணிகள் மேலே எழுப்பப்பட்டன. அதனால், அந்த காரின் டயர்கள் பஞ்சர் ஆகின.
நாடாளுமன்ற காவலுக்கு இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கவச வாகனத்துக்கு பின்னே பதுங்கி நின்று தாக்குதலுக்கு தயாராகினர். அவர்கள் துப்பாக்கியால் சுட தயாரான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
பின்னர், நிலைமையை உணர்ந்து அந்த கார், அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டது. சம்பவத்தின்போது, பா.ஜனதா எம்.பி. அந்த காரில் இருந்தாரா என்று தெரியவில்லை.