மாநிலங்களவை தேர்தல்: ரூ.25 கோடி தருவதாக பா.ஜனதா பேரம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்

மாநிலங்களவை தேர்தலில் ஆதரவாக செயல்பட ரூ.25 கோடி தருவதாக பா.ஜனதா பேரம் பேசியதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-03 20:00 GMT
போபால்,

மத்தியபிரதேச காங்கிரஸ் அரசை சீர்குலைக்க பா.ஜனதா தலைவர்கள் ரூ.25 முதல் ரூ.35 கோடி வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க முன்வந்திருப்பதாக மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் அந்த மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைஜ்நாத் குஷ்வாஹா நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவ்ராஜ் (பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி), நரேந்திரசிங் தோமர் (மத்திய மந்திரி), நரோத்தம் மிஸ்ரா (பா.ஜனதா கொறடா) ஆகியோர் அனுப்பியதாக பிரமோத் சர்மா என்பவர் என்னை சந்தித்தார். மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட ரூ.25 கோடி அல்லது மத்திய மந்திரி பதவி மற்றும் ரூ.5 கோடி தருவதாக என்னிடம் கூறினார். என்னிடம் எதுவும் இல்லை என்றாலும் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். இதைவிட வேறு என்ன வேண்டும். நான் காங்கிரசில்தான் இருப்பேன். என்னை விலைக்கு வாங்க முடியாது என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்