பாலியல் பலாத்கார புகாரில் ஜாமீன்: சின்மயானந்த் வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்

பாலியல் பலாத்கார புகாரில் ஜாமீன் வழங்குவது தொடர்பான சின்மயானந்த் வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகினர்.

Update: 2020-03-02 20:39 GMT
புதுடெல்லி,

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்த், உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது சட்டக்கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவி, அவர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதன்பேரில், கடந்த செப்டம்பர் 20-ந் தேதி சுவாமி சின்மயானந்த் கைது செய்யப்பட்டார். அவரை கடந்த 3-ந் தேதி, அலகாபாத் ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து இரு நீதிபதிகளும் விலகிக் கொண்டனர். தாங்கள் இடம் பெறாத வேறு அமர்வில் இம்மனுவை விசாரணைக்கு பட்டியலிடுமாறு கோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்