சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு: ராகுல் காந்தி கருத்து
சமூக வலைதளங்களில் இருந்து பிரதமர் மோடி விலக உள்ளதாக வெளியான தகவல் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அனைத்து வகையான சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறலாமா என்பது குறித்து இந்த ஞாயிற்றுக்கிழமை யோசித்துக் கொண்டிருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில், அதிகமான பாலோவர்களை வைத்துள்ள பிரதமர் மோடியின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது டுவிட்டர் பதிவுக்கு, பலரும் '#NoSir' என பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து '#NoSir' ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி தனது டுவிட்டரில், “வெறுப்புணர்வை முதலில் கைவிடுங்கள்; சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது தீர்வு அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

Give up hatred, not social media accounts. pic.twitter.com/HDymHw2VrB
— Rahul Gandhi (@RahulGandhi) March 2, 2020