மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்-நிர்மலா சீதாராமன்

மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

Update: 2020-02-01 08:29 GMT
புதுடெல்லி

2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* ஸ்வச் பாரத் மிஷனுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கு ரூ .12,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ஒதுக்கீடு 

* ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்

* தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு. 

* ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம் 

* மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்

* இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் முன்னெடுக்கப்படும்.

* சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்

மேலும் செய்திகள்