திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்
திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
புதுடெல்லி
பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து"
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். திருக்குறளில் கூறியுள்ளபடி சிறப்பான ஆட்சியை மோடி அரசு நடத்தி வருவதாக நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
திருக்குறளை மேற்கோள்காட்டி மோடியை புகழ்ந்த நிர்மலா சீதாராமனுக்கு தமிழக, தேசிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.