ஆதிச்சநல்லூர் உள்பட 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும்- அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

ஆதிச்சநல்லூர் உள்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

Update: 2020-02-01 07:16 GMT
புதுடெல்லி

2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* ஆதிச்சநல்லூர் உள்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும். இந்த 5 இடங்களிலும் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்

* மனிதக் கழிவை மனிதனே அகற்றக்கூடாது. மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் 

* பழங்குடியினர் நலனுக்கு இந்த பட்ஜெட்டில் 53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது, பள்ளிகளில் சேரும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை, ஆண் குழந்தைகள் எண்ணிக்கையைவிட அதிகம்.

மேலும் செய்திகள்