வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது- நிர்மலா சீதாராமன்

வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினர்.

Update: 2020-02-01 05:51 GMT
புதுடெல்லி,

மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது.

இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ந் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

இரண்டாவது நாளான இன்று 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

புது ஆவேசத்துடன் பிரதமரின் தலைமையின் கீழ், இந்திய மக்கள் முன் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை  அனைத்து பணிவுடனும் அர்ப்பணிப்புடனும் முன்வைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் பொருளாதாரக் கொள்கையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

* இந்திய பொருளாதாரத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளது.

* அடிப்படை  கட்டமைப்புகளை வலுப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. 

*  மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்கும்

* ஜிஎஸ்டி காரணமாக நாட்டில்  60 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்தி உள்ளனர்.

* வருவாய் மற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

* ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு குடும்பங்களில் 4 சதவீதம் சேமிப்பு உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்