அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6 -6.5 சதவீதமாக உயரும் -பொருளாதார ஆய்வறிக்கை

அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயரும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

Update: 2020-01-31 10:27 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நாளை நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதன்பிறகு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு  பொருளாதார ஆய்வறிக்கை இரண்டு தொகுதிகள்  லாவெண்டர் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அது புதிய 100 ரூபாய் நோட்டின்  நிறத்தைப் போலவே உள்ளது.

ஏப்ரல் 1 முதல் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கணித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டின் வளர்ச்சி 2019-20 ஆம் ஆண்டில் 5 சதவீத விரிவாக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது.

சீர்திருத்தங்களை விரைவாக வழங்க அரசு வலுவான நடவடிக்கை எடுக்க  வேண்டும். இது 2020-21 ஆம் ஆண்டில் பொருளாதாரம் வலுவாக முன்னேற உதவும்.

வளர்ச்சியை அதிகரிப்பதற்காக, வேலைவாய்ப்புகளை உருவாக்கும்  ‘இந்தியாவில் ஒன்றுகூடுங்கள்’என்ற உற்பத்திக்கான புதிய யோசனைகளுக்கு பொருளாதார அறிக்கை அழைப்பு விடுத்து உள்ளது.

வியாபாரத்தை எளிதாக்குவதற்காக, ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக  வணிகத்தின் தொடக்கத்தை எளிதாக்குவதற்கும், சொத்துக்களை பதிவு செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும், ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை அழைப்பு விடுத்து உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், நம்பிக்கையை வளர்ப்பதற்கும் தகவல்களை மேலும் வெளிப்படுத்த வேண்டியதன்  அவசியத்திற்கு ஆய்வறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. பொருளாதார  சந்தைகளுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் 10 புதிய  யோசனைகளை ஆய்வறிக்கை பரிந்துரைத்து உள்ளது.

மேலும் செய்திகள்