ரெயில்வே பணிகள் இணைப்புக்கு அதிகாரிகள் எதிர்ப்பு: பிரதமர், ரெயில்வே மந்திரிக்கு மனு அனுப்பினர்
ரெயில்வே பணிகளை இணைக்கும் முடிவுக்கு ரெயில்வே அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர், ரெயில்வே மந்திரி உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி வைத்தனர்.
புதுடெல்லி,
ரெயில்வேயில் 12 வகையான பணிகள் உள்ளன. அவற்றை ‘இந்திய ரெயில்வே மேலாண்மை பணி’ என்ற பெயரில் ஒரே பணியாக இணைக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடந்த 2 நாள் மாநாட்டில் அதிகாரிகளின் ஒருமித்த ஆதரவுடன் இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது.
இந்நிலையில், இந்த முடிவுக்கு ரெயில்வே அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 13 மண்டலங்கள், 60 கோட்டங்களை சேர்ந்த சிவில் சேவை அதிகாரிகள், 250 பக்க மனுவை தயாரித்துள்ளனர். அதை பிரதமர் மோடி, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், ரெயில்வே வாரிய தலைவர், மந்திரிசபை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே பணிகளை ஒன்றாக இணைக்கும் முடிவு தன்னிச்சையானது. ரெயில்வே மாநாட்டில் பொதுமேலாளர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில், பொது மேலாளர்கள், என்ஜினீயரிங் சேவை அதிகாரிகளுக்கு சாதகமாக இந்த முடிவை எடுத்தனர்.
சிவில் சேவை அதிகாரிகளை பேச அனுமதிக்கவில்லை. மாற்றுக்கருத்துகளை பேச அனுமதிக்காவிட்டால், ரெயில்வே மந்திரி விரும்புகிற ஜனநாயகமாக அதை எப்படி கருத முடியும்?
இந்த இணைப்பு முடிவு, என்ஜினீயரிங் சேவை அதிகாரிகளுக்குத்தான் பொருத்தமானது. எங்களுக்கு அல்ல. மேலும், ரெயில்களை இயக்குவதில் இது எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆகவே, ரெயில்களுக்கு பாதுகாப்பானது அல்ல.
இந்த முடிவு, துறை மேலாதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று ரெயில்வே மந்திரி கூறுவது சரியல்ல. ஏனென்றால், மண்டலங்களிலும், கோட்டங்களிலும் துறை மேலாதிக்கம் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் வந்த அதிகாரிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் உறுதி அளித்திருப்பதாக கூறினார்.
மேலும், ரெயில்வே பணிகள் இணைப்பு தொடர்பாக இமெயிலில் தெரிவிக்கும் யோசனைகள் மட்டும் பரிசீலிக்கப்படும் என்றும், இதுபோன்ற மனுக்கள் பரிசீலிக்கப்படாது என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை இமெயிலில் 900 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மந்திரிசபை செயலாளர் தலைமையிலான செயலாளர்கள் குழு, ஒவ்வொருவரின் நலன்களையும் பாதுகாக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.