தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்படும்; மத்திய அரசு அறிவிப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-01-07 22:45 GMT
புதுடெல்லி, 

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எளிதாகவும், விரைவாகவும், குலுங்காமலும் செல்வதற்கு வசதியாக வேகத்தடைகள் அனைத்தும் அகற்றப்படும். வேகத்தடைகளில் வாகனங்கள் ஏறி, இறங்குவதால் கூடுதல் எரிபொருள் செலவு, விபத்து, போக்குவரத்து நெரிசல், வாகன பாதிப்பு போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறிப்பாக சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ அமல்படுத்தப்படுவதால் வாகனங்கள் தடையின்றி செல்ல வசதியாக அங்குள்ள வேகத்தடைகள், இரும்பு குழாய் பாதைகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்