டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது

டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது என வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2020-01-07 05:31 GMT
புதுடெல்லி

டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காற்றின் தரம் 314 ஆக  உள்ளது என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சஃபர்) தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் மதுரா சாலையில் 338 ஆக உள்ளது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் 328, டெல்லி பல்கலைக்கழகம் 317, திர்பூர் 316, அயனகர் 310, சாந்தினி சவுக் மற்றும் லோதி சாலை 309, ஐ.ஐ.டி-டெல்லி 302, மற்றும் பூசா 272, குருகிராமில் 317 ஆக உள்ளது  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சஃப்தர்ஜங் மற்றும் பாலத்தில் காலை 5.30 மணிக்கு வெப்பநிலை 13 டிகிரி  செல்சியஸாக இருந்த போதிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸையும் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸையும் எட்டி உள்ளது.

காற்றின் தரக்குறியீடு

 0-50 க்கு  இடையில் - நல்லது

 51-100க்கு இடையில் திருப்திகரமானது

101-200 க்கு இடையில் மிதமானது

201-300 க்கு இடையில் மோசம்

301-400க்கு இடையில் மிக மோசம்

401-500 'கடுமையானது' என்று குறிக்கப்பட்டுள்ளது. 500-க்கு மேல் 'கடுமையான பிளஸ்' பிரிவில் வருகிறது.

மேலும் செய்திகள்