தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டை பிரிக்கும் அச்சுறுத்தலான திட்டம்; ப.சிதம்பரம் பேட்டி

தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டை பிரிக்கும் அச்சுறுத்தலான திட்டம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2020-01-06 23:00 GMT
புதுடெல்லி, 

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டை பிரிக்கும் அச்சுறுத்தலான மற்றும் தீங்கான திட்டம். அதன்படி இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். நவீன, பாரபட்சமற்ற ஜனநாயகத்தில் குடியுரிமை என்பது வாழுமிடம் அடிப்படையில் இருக்க வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் இந்து தேசம் என்ற பிரிவினை திட்டத்தின் ஒரு பகுதிதான். சமத்துவம், சமமான பாதுகாப்பு, மதசார்பற்ற தன்மை, மனிதநேயம் ஆகிய அரசியல்சாசன மதிப்புகளை பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொரு இந்திய தேசபக்தரும் இந்து தேசம் என்ற கோட்பாட்டுக்கு எதிராக போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்