டெல்லி ஜே.என்.யூ.வில் பல்கலைழக மாணவர்கள் மீது தாக்குதல்: ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி ஜே.என்.யூ.வில் பல்கலைழக மாணவர்கள் மீது தாக்குதல்: ராகுல்காந்தி கண்டனம்

Update: 2020-01-05 16:37 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ஜே.என்.யூ. பல்கலைழக மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மற்றும் மற்ற மாணவர்களும் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து  ராகுல்காந்தி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஜே.என்.யூ. பல்கலைழக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாசிஸ்ட்டுகள் நாட்டை கட்டுக்குள் வைத்துள்ளனர்.  மாணவர்களின் துணிச்சலான குரல்களுக்கு நாட்டை கட்டுப்படுத்தும் பாசிஸ்ட்டுகள் அஞ்சுகிறார்கள்.
இந்த தாக்குதல் மோடி அரசுக்கு வந்துள்ள அச்சத்தை காட்டுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்